சாதி வெறுப்பு, இனவெறுப்பு ஆகியவைதான் திராவிட இயக்கங்களின் அடித்தளமாக உள்ளதாக, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வரும் 28ம் தேதி முதல் மேற்கொள்ளும் நடைபயணத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், நடைபயணத்தில் இடம்பெற உள்ள புகார் பெட்டியின் அறிமுக விழா சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, தி.மு.க.வில் இருந்து இளைஞர்கள் பா.ஜ.கவிற்கு கட்சி மாறுவதாக தெரிவித்தார்.