முன்னாள் உளவுத்துறை அதிகாரி கொலையில் சிக்கிய முக்கிய ஆதாரம்... வாக்கிங் சென்ற போது நடந்த பயங்கரம் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2022-11-06 13:08 GMT

முன்னாள் உளவுத்துறை அதிகாரி கொலையில் சிக்கிய முக்கிய ஆதாரம்... வாக்கிங் சென்ற போது நடந்த பயங்கரம் - அதிர்ச்சி காட்சிகள்


கர்நாடகாவில் வாக்கிங் சென்று கொண்டிருந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரியை மர்மநபர்கள் கார் ஏற்றி கொலை செய்த,பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்திய அரசில் சுமர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் குல்கர்னி. இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது குடும்பத்துடன் மைசூரில் வசித்து வந்தார். இந்நிலையில், குல்கர்னி தினமும் அருகில் உள்ள இடத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை நடைபயிற்சி செல்லும் போது உடலில் காயங்களுடன் அசைவற்று கீழே விழுந்து கிடந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குல்கர்னி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அருகில் உள்ள சிசிடிவியை ஆராய்கையில் பதிவெண் இல்லாத, பழுப்பு நிற கார் ஒன்று குல்கர்னியை ஏற்றி கொலை செய்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் கிடைத்த சில தடயங்களை கொண்டும், சிசிடிவி உதவியுடனும் அந்நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்