சபரிமலை பக்தர்களிடையே அதிர்ச்சி... உரிமம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட அரவணை
சபரிமலை ஐயப்பன் கோயிலில், தேவசம் போர்டு சார்பாக அப்பம் மற்றும் அரவணையை தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அண்மையில், ஏலக்காயில் 14 பூச்சிக்கொல்லி மருந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதால், ஏலக்காய் கலந்த அரவணையை விற்பனை செய்ய கேரளா உயர்நீதிம்னறம் தடைவிதித்திருந்தது.
இந்நிலையில் உணவு பாதுகாப்பு தரச்சான்றிதழ் உரிமம் இல்லாமல் அரவணை தயாரிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
அரவணை டின்களில் தயாரிப்பு தேதி, எடை மட்டும் அச்சிடப்படுகிறது.
ஆனால், காலாவதி தேதி, பயன்படுத்தும் பொருட்களின் அளவு உள்ளிட்ட எவ்வித அறிவிப்புகள் இல்லாமல் விற்கப்படுவது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.