இந்த ஆண்டின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனை இவர்தான்..! | Iga Swiatek | Tennis

Update: 2022-12-13 17:19 GMT

இந்த ஆண்டின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனையாக போலந்தைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 2 கிராண்ட்ஸ்லாம் உள்பட நடப்பு ஆண்டில் 8 பட்டங்களை ஸ்வியாடெக் வென்ற நிலையில், 2022ம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக ஸ்வியாடெக்கை சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் அறிவித்து உள்ளது. இரட்டையர் பிரிவில் செக் வீராங்கனைகள் சினக்கோவா மற்றும் கிரெஜ்சிகோவா சிறந்த வீராங்கனைகளாக தேர்வாகி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்