மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஐஐடி நிர்வாகம் அலட்சிய பதில்

Update: 2022-07-31 15:39 GMT

கடந்த 24ம் தேதி நள்ளிரவு சென்னை ஐ.ஐ.டி., மாணவி ஒருவர் தங்கியிருக்கும் விடுதிக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென பாலியல் தொந்தரவு அளித்ததால் அதிர்ச்சியடைந்த மாணவி உதவி கேட்டு கூச்சலிட்டும் யாரும் வராததால், மாணவி மர்ம நபருடன் சண்டையிட்டு காப்பாற்றி கொண்டதாக தெரியவந்துள்ளது. காயமடைந்த மாணவி புகார் ஏதும் அளிக்காத நிலையில், மாணவியின் நண்பர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், முதற்கட்டமாக, ஐ.ஐ.டி.யில் வேலை பார்க்கும் வட மாநில நபர்களில் யாராவது இருக்கலாம் என, 300 பேரின் புகைப்படங்களை காட்டினர். அன்று ஐ ஐ டியில் வேலை பார்த்த 35 கட்டுமான ஊழியர்களையும் அழைத்து நிர்வாகம் அடையாள அணிவகுப்பு நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, 600 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் பாதுகாப்பு அளிப்பது சவாலாக இருப்பதாகவும், பட்டி சிஸ்டம் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஐஐடி நிர்வாகம், இதுபோன்று பாலியல் தொந்தரவு தொடர்பான புகாருக்கு மாணவர்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பதில் அளித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் சென்னை காவல்துறை உதவி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் ஐஐடி வளாகத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு விவகாரம் தொடர்பாகவும் அதில் ஐஐடி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமும் கேட்டுள்ளனர்.என்ற முறையில் நண்பர்களை உடன் அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்