சூடு பிடிக்கும் செந்தில் பாலாஜி வழக்கு..3வது நீதிபதி முன்பு இன்று விசாரணை..
அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிடக்கோரி, அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர், மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால், வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு உட்படுத்துமாறு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி சி.வி.கார்த்திகேயனை மூன்றாவது நீதிபதியாக நியமித்து, தலைமை நீதிபதி கங்கபுர்வாலா அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று பிற்பகல் 2:15 மணிக்கு மூன்றாவது நீதிபதி முன்பு அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.