கள்ளநோட்டு அடிக்க உதவிய யூடியூப்... நக பாலிஷ் வைத்து அசத்திய 'ஆர்ட்டிஸ்ட்'
ஆந்திர மாநிலம் சித்தூர், கே.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவர், கள்ளநோட்டு அச்சிடுவதற்காக, கலர் பிரிண்டர், ஸ்கேனரை பெங்களூருவில் இருந்து வாங்கி வந்தார். பின்னர், ஒரிஜினல் நோட்டுக்களை ஸ்கேன் செய்து, அதன்மூலம் கள்ளநோட்டுகளை தயாரித்தார். அவற்றை மதனப்பள்ளியில் உள்ள சந்தையில் காய்கறி வாங்குவது போல் நடித்து மாற்றியுள்ளார். இந்நிலையில், நேற்று மீண்டும் சந்தையில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்றபோது அவரை வியாபாரிகள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். கோபாலிடம் இருந்த கைப்பையை சோதனை செய்தபோது, 500, 200, 100 கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தன. பின்னர் கைது செய்து நடத்திய விசாரணையில், யூடியூப்பை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டதாக தெரிவித்தார். கோபாலிடமிருந்து கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கலர் பிரிண்டர், மை பாட்டில்கள், நக பாலிஷ் ஆகிவற்றையும் கைப்பற்றினர்.