- விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தின் காப்பகத்தில் இருந்து, திருப்பூரை சேர்ந்த ஜபருல்லா உள்பட 53 பேர், பெங்களூரில் உள்ள ஆசிரமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- அவர்களில் 15 பேர், அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜபருல்லாவின் உறவினர்கள், விழுப்புரத்தில் உள்ள ஆசிரமத்திற்குச் சென்று கேட்டபோது, ஜபருல்லா உள்ளிட்டோர் தப்பி விட்டதாக தெரிவித்தனர்.
- இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
- அதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, ஆசிரமம் முறையாக அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது.
- மேலும், அங்கு தங்கியிருந்தவர்களை துன்புறுத்தி வந்ததாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து, ஆசிரமத்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- விதிமுறைகளை மீறி செயல்பட்ட அந்த காப்பகம், மாவட்ட ஆட்சியர் பழனியின் உத்தரவுப்படி மூடப்பட்டது.