தமிழ்நாட்டில் தொடர் கண்காணிப்பு மூலம் சட்டவிரோத கருக்கலைப்பு குறைந்துள்ளதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முறையான அனுமதி பெறாத கருக்கலைப்பு ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்படுவதாக தெரிவித்தார். உலக மக்கள் தினத்தையொட்டி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இதனை தெரிவித்தார்.