திருவையாறு அருகே மணல் லாரி மோதி பள்ளி மாணவி படுகாயமடைந்ததால், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வைத்தியநாதன் பேட்டையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற வைஷ்ணவி என்ற 7 ஆம் வகுப்பு மாணவி, மணல் லாரி மோதியதால் படுகாயமடைந்தார். அவர் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராம மக்கள் 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பள்ளிக்கூடம் தொடங்கும் நேரம், விடும் நேரங்களில் மணல் லாரிகள் இயக்கக் கூடாது என்றும், மாணவியின் மருத்துவ செலவுகளை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. இதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.