பெரியார் முகம் பொறித்த செங்கோல் - சமூகநீதி அமைப்பினருக்கு அதிர்ச்சி கொடுத்த சித்தராமையா

Update: 2023-06-18 23:32 GMT

கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதலமைச்சர் சித்தராமையாவிற்கு , சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க திட்டமிட்டிருந்தனர். சித்தராமையாவின் அலுவலகத்தில் வைத்து அதை ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்த நிலையில் அந்த செங்கோலில் பெரியார் முகமும் செதுக்கப்பட்டது... இந்த நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த சமூகநீதி அமைப்பினருக்கு சித்தராமையா பெரிய twist கொடுத்தார்.ஜனநாயகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவதை குறிப்பிட வேண்டும் என்று விரும்புவதாக செங்கோலை கொடுத்தவர்களிடம், "செங்கோல் என்பது அரச மரபை போற்றும் ஒன்று" என்று கூறி, மற்ற பரிசுகளை வாங்கிக் கொண்டு செங்கோலை வாங்க மறுத்துவிட்டார் சித்தராமையா..!சமூகநீதி அமைப்பினருக்கு இது சற்றே அதிர்ச்சியை கொடுத்தாலும், அவர் சொன்னதில் உள்ள உண்மையை ஏற்றுக் கொண்டனர். சமீபத்தில்தான் எனக்கு சால்வை , பூங்கொத்துகளை வழங்குவதை விட்டுவிட்டு புத்தகங்களை பரிசாக கொடுங்கள் என கூறியிருந்தார்....

சித்தராமையா செங்கோல் விசயத்தில் மட்டும் அதிரடி காட்டவில்லை, பள்ளி பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் பற்றிய பாடத்தை நீக்க உத்தரவிட்டார். இதற்கு முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. அதே போல கடந்த ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட மத மாற்ற தடைச்சட்டத்தை நீக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும்,பள்ளி கல்லூரிகளில் அரசியலமைப்பின் முகப்புரை பக்கத்தை தினமும் படிப்பதை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளனர்.... சித்தராமையாவின் இந்த அதிரடி காரியங்களுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், மறுபக்கத்தில் வாழ்த்தும் குவிந்து கொண்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்