காஞ்சிபுரத்தில் 2 செயற்கைக்கோள் நகரங்களை உருவாக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 - 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், காஞ்சிபுரம் நகரத்தின் மேம்பாட்டுத்திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சுமார் 36 சதுர கிலோமீட்டர் அளவில் வையாவூர், கலையானூர் உள்ளிட்ட 17 கிராமங்களை ஒருங்கிணைத்து திட்டப்பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.