சாத்தான்குளம் தந்தை- மகன், மரண ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி, காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பிஎஸ்என்எல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்கள், தந்தையும் மகனும் காவல் நிலையத்தில் துன்புறுத்தப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சாத்தான்குளத்தில்தான் இருந்தனர் என ஆதாரங்களுடன் கூறினர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 26 ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.