தென்னிந்திய கலாச்சார உடை அவமதிப்பு? வேட்டியை தூக்கி கட்டி டான்ஸ்... சர்ச்சையில் சிக்கிய சல்மான் கான் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

Update: 2023-04-10 15:35 GMT
  • ஒரு காலத்தில் ஹிட்ட மேல் ஹிட்... என கலக்கி கொண்டிருந்த பாலிவுட்... சமீபமாக அடி மேல் அடி வாங்கி டல்லடித்து வருகிறது.
  • மாஸ் ஹீரோ.. பெரிய ஃபேன் பாலோயிங்... பிரம்மாண்ட மேக்கிங்... என கலக்கலாக என்ட்ரி கொடுத்தாலும்... பாக்ஸ் ஆபீஸில் கலெக்‌ஷன் கல்லா கட்டவதில்லை... போதாத குறைக்கு 'பாய்காட் பாலிவுட்' என பாரபட்சமின்றி படங்களை ஓரங்கட்டிய ஹேஷ்டேக்களின் வலையிலும் சிக்க வேண்டியிருந்தது.
  • இதையடுத்து... தென்னிந்திய படங்களின் மீது கவனத்தை திருப்பிய பாலிவுட்... அதே சாயலில் ரீமேக் செய்வும் ஆர்வம் காட்ட தொடங்கியது.
  • அந்த வரிசையில், தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித்தின் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான சல்மான் கான் நடிக்கிறார் என்றதுமே... படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுமே டிரெண்டிங் தான்....
  • அந்த வரிசையில், டிரெண்டான 'யென்டம்மா' பாடல் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
  • சல்மான் கானுடன் தெலுங்கு நட்சத்திரங்களான வெங்கடேஷ், ராம் சரணும் இணைந்து இந்த பாடலில்
  • நாட்டு நாட்டு பாடல் ஸ்டெப்பை ரிகிரியேட் செய்திருப்பார்கள்.
  • ஆனால் லுங்கிக்கும் வேட்டிக்கும் வித்தியாசம் தெரியாமல் அவர்கள் போட்ட ஆட்டம் தான் தற்போது சர்ச்சையாகி யுள்ளது.
  • போதாத குறைக்கு... சல்மான் கானும் தனது பங்கிற்கு 'யென்டம்மா' பாடலுக்கு காமெடியாக ஒருவர் ஆடிய நடனத்தை ஷேர் செய்தது... இதென்ன தென்னிந்திய கலாச்சார உடைக்கு வந்த சோதனை என பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
  • குறிப்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராம கிருஷ்ணன் விமர்சனம், தனி கவனம் பெற்றுள்ளது.
  • ஏற்கனவே படத்தின் டீசரின் போதே... கிராமிய பின்னணி கொண்ட வீரம் படத்திற்கும்... இந்த படத்திற்கும் சம்பந்தமே இல்லையே என ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்...
  • இந்த நிலையில், தற்போது தென்னிந்திய ரசிகர்களின் அதிருப்திக்கு காரணமாகியுள்ளது, கிஸி க பாய் கிஸி கி ஜான்
Tags:    

மேலும் செய்திகள்