இன்ஸ்டா காதலனை தேடி சென்னை டூ சேலம் பயணம்... 13 வயது சிறுமி செய்த பகீர் சம்பவம்!

Update: 2023-03-13 02:27 GMT
  • இன்ஸ்டாகிராம் காதலனை தேடி, சேலம் சென்ற பெரம்பூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, குழந்தைகள் நல அமைப்பினர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பெரம்பூரை அடுத்த திரு.வி. க நகர் பகுதியை சேர்ந்த கோபி என்பவரது 13 வயது மகள், உடல்நிலை சரியில்லை என பள்ளியில் இருந்து பாதியிலேயே வீட்டுக்கு கிளம்பியுள்ளார்.

வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராத மகளை, அவரது தந்தை எங்கு தேடியும் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், சேலம் பகுதியில் இருந்து சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்ட குழந்தைகள் நல அமைப்பினர், காணாமல் போன சிறுமி சேலத்தில் இருப்பதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் போலீசார், சேலத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர்.

இதுதொடர்பான விசாரணையில், சிறுமி இன்ஸ்டாகிராமில் சேலத்தை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாகவும், காதலனை பார்க்க சேலம் வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து சிறுமிக்கு அறிவுரை கூறிய போலீசார், அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்