நீலகிரி மாவட்டம் குன்னூரில் 17 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், குன்னூர் பகுதிகளில் வருவாய்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.
குறிப்பாக, பேக்கரிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, 56 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.
மேலும், பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.