3வது குழந்தை வேண்டாம் என முடிவெடுத்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கதறிய கணவர்
கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணவாடி ஊராட்சியை சேர்ந்த, கல்லுமடை காலனி பகுதியை சேர்ந்தவர் முகேஷ் குமார்.
இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜோதி அனுமதிக்கப்பட்டார்.
அப்போது ஜோதிக்கு அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜோதி உயர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறிய உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருகிறது