சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்கு முன் நிகழ்ந்த அதிபயங்கரம்.. ஒருவர் கவலைக்கிடம்

Update: 2023-01-03 05:14 GMT

சபரிமலை சன்னிதானம் வெடி வழிபாட்டை தற்காலிகமாக நிறுத்த தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது.

இந்த நிலையில், மாளிகைபுரம் அருகே வெடி வழிபாட்டுக்கான மருந்து நிரப்பும் மையத்தில் வெடி விபத்து ஏற்பட்டதால் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

அவர்கள் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகளிடம், தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிக்கை கேட்டுள்ளார்.

இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க தேவசம் போர்டு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, சபரிமலையில் வெடி வழிபாட்டை தற்காலிகமாக நிறுத்த தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்