உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாகப் போரிடும் வாக்னர் குழு - அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வாக்னர் கடிதம்

Update: 2023-01-22 10:09 GMT

ரஷ்யாவின் வாக்னர் குழுவை "நாடு கடந்த குற்றவியல் அமைப்பு" என்று அமெரிக்கா அறிவித்த நிலையில், வாக்னர் தலைவர் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு கடிதம் எழுதியுள்ளார்.


உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாகப் போரிடும் வாக்னர் குழுவின் மீது புதிய தடைகளை அமெரிக்கா அறிவித்த நிலையில், இது குறித்த வாக்னர் தலைவரின் கடிதத்தில், "தங்கள் குழு என்ன தவறு செய்தது என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா?" என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


அமெரிக்கா ஏற்கனவே 2017இல் வாக்னருடனான வர்த்தகத்தின் மீது கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.


சிரியா, லிபியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, சூடான், மொசாம்பிக், மாலி மற்றும் தற்போது உக்ரைனில் படைகளைக் கொண்டுள்ள வாக்னர் மீது 2021 டிசம்பரில் ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்