உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் புதிய ஆயுதங்களை வழங்குவது போர்க்களத்தில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தாது என்றும், மாறாக மோதலை இன்னும் அதிகப்படுத்தும் எனவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அத்துடன் உக்ரைன் நேட்டோவில் இணையும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர், அது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார்.