போரை தீவிரப்படுத்திய ரஷ்யா.. உக்ரைனில் நாலாபுறமும் குண்டுமழை- அதிர்ச்சி காட்சிகள்

Update: 2022-10-11 10:28 GMT

ரஷ்யா ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்துகிறது என உக்ரைன் அதிபர் விளாடிமீர் செலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் சுற்றிலும் நாலாபுறமும் ரஷ்யா ஏவுகணைகளை வீசியிருப்பது போரை தீவிரமாக்கியிருக்கிறது. பொதுமக்களையும், உக்ரைனின் எரிசக்தியை குறிவைத்து ரஷ்யா பயங்கரவாத தாக்குதலை நடத்தியிருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இதில் மற்றொரு அதிர்ச்சி தகவலாக ரஷ்யா, ஈரான் தயாரிப்பு ட்ரோன்கள், ஏவுகணைகளை பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை உக்ரைன் அதிபர் விளாடிமீர் செலென்ஸ்கி முன்வைத்துள்ளார். ஏற்கனவே ரஷ்யாவின் பல ஆயுதங்கள் போரில் அழிக்கப்பட்டு விட்டதாகவும், ரஷ்யா பிற நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கவும், சிரியாவிலிருந்து பழைய ரஷ்ய வாகனங்களை கொண்டு வருகிறது எனவும் மேற்கத்திய நாடுகளின் உளவுத்துறை வட்டார தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அமெரிக்காவுடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் ஈரானின் ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துகிறது என்பது கவனம் பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்