’Girl Bestie’ கிடைக்காத விரக்தி..ரூ.1.34 கோடியில் ஆபரேஷன் - உலகையே திரும்பி பார்க்க வைத்த அமெரிக்கர்
5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட 41 வயதான மோசஸ் கிப்சன், குட்டையாக இருப்பதாக கருதப்பட்டு, கேலிக்கு உள்ளானவர். பெண் தோழி கிடைக்காததால், தனது உயரத்தை அதிகரிக்க, இரண்டு முறை கால் எலும்புகளில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சையின் போது, கால் எலும்பு இரண்டாக பிரிக்கப்பட்டு, இரண்டு துண்டுகளும் ஒரு சட்டகம் மூலம் இணைக்கப்படுகிறது. இவற்றிற்கு இடையே உள்ள இடைவெளி, எழும்பு வளர்ச்சி மூலம் படிப்படியாக நிரப்பப்பட்டு, முழு இணைப்பு உருவாக்கப்படுகிறது.
2016இல் நடந்த முதல் அறுவை சிகிச்சையில் 3 அங்குலமும், கடந்த மாதம் நடந்த இரண்டாவது அறுவை சிகிச்சையில் 2 அங்குல உயரமும் பெற்றார் மோசஸ் கிப்சன். யூபர் ஓட்டுனராகவும், சாப்ட்வேட் எஞ்சினீராகவும் பணியாற்றி
இதற்காக பணம் சேர்த்து, மொத்தம் ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். உயர்த்தை மேலும் அதிகரிக்க, தினசரி மூன்று முறை, இழுவை கருவி ஒன்றின் மூலம் சிறப்பு பயிற்சி மேற்கொண்டுள்ளார்.