மாதம் ரூ.1000 உதவித்தொகை - வெளியான முக்கிய அறிவிப்பு
புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,
அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைபெண் திட்டம் துவங்கப்பட்டது எனவும் இதுவரை 2, 3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இணையதளம் மூலம் முதலாம் ஆண்டு மாணவிகளும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் ஒன்று முதல் 11 ஆம் தேதி வரை, பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.