ரூ.14.50 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்-சாலையோரம் சிதறி கிடந்த ரூ.500 நோட்டுகள்
வேலூர் அருகே சாலையோரம் கிடந்த 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொணவட்டம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே காரில் வந்த கும்பல் ஒன்று கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு தப்பியது. காற்றில் அவை பறந்ததால் வாகன ஓட்டிகள் போட்டிப்போட்டு எடுத்தனர். தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸார், சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர். பொதுமக்கள் எடுத்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். ஆய்வில் அவை கலர் ஜெராக்ஸ் எடுத்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.