க்யூட் 'சிக்ஷா' ரோபோ டீச்சர்..பள்ளி மாணவர்களுக்கு க்ளாஸ் எடுக்கும் ரோபோ - மாதங்களை சொல்லிக்கொடுத்த காட்சி
- கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் மனித வடிவிலான ரோபோவை கல்லூரி பேராசிரியர் வடிவமைத்துள்ளார்.
- உத்தர கன்னடா மாவட்டம் சிர்சியை சேர்ந்த அக்ஷய் என்பவர் கல்லூரி பேராசிரியராக உள்ளார்.
- இந்த நிலையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் சிக்ஷா என்ற மனித வடிவ ரோபோவை சைதன்யா வடிவமைத்துள்ளார்.
- இந்த ரோபோ 4ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திறன் கொண்டதாக தெரிவித்த அக்ஷய், கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ரோபோவை வடிவமைத்ததாக கூறியுள்ளார்.
- சிக்ஷா ரோபோ மாணவர்களின் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கும் என்றும், வாய்ப்பாடு, குழந்தைகளுக்கான கவிதை, பாடல் உள்ளிட்டவைகளை கற்பிக்கும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.