ரயிலில் வழிப்பறி..பெண் பலியான சம்பவம்..இனி பறக்கும் ரயில் இவங்க கண்ட்ரோல் தான்

Update: 2023-07-12 02:59 GMT

வழிப்பறி சம்பவத்தில் ப்ரீத்தி என்ற பெண் உயிரிழந்ததை தொடர்ந்து, சிறப்பு பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில் சேவையில் மொத்தம் 17 ரயில் நிலையங்களும், 140 ரயில் சேவைகளும் உள்ளன. இதில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே ஏடிஜிபி வனிதா உத்தரவின் பேரில், ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 15 காவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் குறிப்பாக பெண்கள் பயணிக்கும் பெட்டிகள், நடைமேடைகள் மற்றும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இந்தக் குழுவினர் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, வேளச்சேரி ரயில் நிலையம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்