குள்ளநரி தந்திரம்.. கோவாவில் உல்லாசம்.. 5 பேரை இணைத்த ஒரு புள்ளி - தட்டித்தூக்கிய சென்னை போலீஸ்

Update: 2022-12-29 10:04 GMT

பெரம்பூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் என்ற பெயரில் நகைகள் வாங்க வந்தவர்களிடம் பண மோசடி செயப்பட்ட வழக்கின் விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திரமாநிலம் குண்டூரில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர், கடையில் பணிபுரியும் இருவரிடம் பணம் கொடுத்து சென்னை செளகார்பேட்டையில் நகைகள் வாங்கி வர அனுப்பியுள்ளார். கையில் 1 கோடி ரூபாய்க்கும் மேலான பணத்துடன் இருவரும் கொடுங்கையூர் அருகே ஆட்டோவில் வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது வழிமறித்த மர்ம கும்பல் வருமான வரித்துறையினர் என கூறி 68 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் புகாரளித்த இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பணத்தை பறி கொடுத்த சுபானி என்பவரே, கொள்ளைக்கான திட்டத்தை வகுத்து, கொள்ளையர்களுக்கு தகவல் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் 5 பேரை கைது செய்த போலீசார், கைது செய்யப்பட்ட அனைவரும் ஒன்றாகவே நகைக்கடையில் வேலைபார்த்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், கொள்ளையடித்த பணத்தை சமமாக பிரித்து, கோவாவில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், அவர்களை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்