பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வானது எல்லை தாண்டிய மைல்கல் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழாரம்
பிரிட்டன் அதிபராக ரிஷி சுனக் தேர்வானது எல்லை தாண்டிய மைல்கல் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழ்ந்துள்ளார். பிரிட்டன் பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அது குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி இருப்பது நம்ப முடியாத மைல்ல என கூறியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் உட்பட 200 பேரால் பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி இருப்பதாக குறிப்பிட்ட பைடன், எல்லைகளை தகர்த்தெறிந்து அவர் சாதித்திருப்பதாக புகழ்ந்தார்.