அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், கடந்த அதிபர் தேர்தலில் பைடனிடம் தோல்வியைத் தழுவியவருமான முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து, தீவிர பிரச்சாரங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதை தற்போது பைடனும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்... இந்த சூழலில், துணை அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.