கேரளாவில் ஓய்வு பெற்ற ஆசிரியரை தலையில் அடித்துக் கொன்று நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் கணேசமங்கலம் வதனப்பள்ளியை சேர்ந்தவர் வசந்தா. 75 வயதான இவர், தளிக்குளம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
வீட்டில் தனியாக வசித்து வந்த இவர், திடீரென தலையில் பலத்த காயங்களோடு சடலமாக மீட்கப்பட்டார்.
அப்போது கணேசமங்கலத்தை சேர்ந்த ஜெயராஜன் என்பவர் வசந்தா அணிந்திருந்த நகைக்காக அவரை தலையில் அடித்துக் கொலை செய்து விட்டு நகைகளுடன் மாயமானது தெரியவந்தது.
வசந்தாவின் உறவினர் தான் ஜெயராஜன் என்பதும் தெரியவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.