2.5 ஆண்டுகளில் 3,033 பேர் சடலமாக மீட்பு - தீயணைப்பு துறையினரின் அதிர்ச்சித் தகவல்!
தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில், நீர் நிலைகளில் உயிருக்கு போராடிய ஆயிரத்து 472 பேரை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மீட்டுள்ளனர்.
நீர்நிலைகளுக்கு அருகில் நிகழும் மரணங்களை தடுப்பதற்காக தமிழக காவல்துறையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினர், கடலோர பாதுகாப்பு குழுமம், உயிர்காக்கும் தடுப்பு பிரிவு ஆகியோர் தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீர்நிலைகளில் மூழ்கிய ஆயிரத்து 472 பேரை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தாக தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை தெரிவித்துள்ளது. இதுதவிர, நீர் நிலைகளில் இருந்து 3 ஆயிரத்து 033 பேரை சடலமாக மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை மெரினா கடற்கரையில் அலையில் சிக்கிய 42 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் என்றும், 40 பேர் சடலமாக மீட்கப்பட்டனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.