17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நிருபர்.. தாயும் உடந்தையான கொடூரம் - திருச்சியில் அதிர்ச்சி

Update: 2023-04-14 05:29 GMT

திருச்சியில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பத்திரிக்கையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் வந்த தகவலை அடுத்து, கன்னியாகுமரியை சேர்ந்த கிறிஸ்டல்ராஜ், திருச்சியை சேர்ந்த ரமீஜா பானு ஆகியோரை கைது செய்தனர்.

இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணையில், கைதான கிறிஸ்டல்ராஜ், மாதாந்திர பத்திரிக்கையல் நிருபராக பணியாற்றி வருவதும், ரமீஜா பானுவுடன் சேர்ந்து பல பெண்களை அவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கிறிஸ்டல்ராஜ், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் அம்பலமானது. இந்த கொடூர செயலில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நித்யாவும் உடந்தையாக இருந்தது அம்பலமானதை அடுத்து, அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்