ஒரே தேதியில் மீண்டும் மீண்டும் ஏற்படும் நிலநடுக்கம் - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது... மைக்கோகன் மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7ஆகப் பதிவானது.
இதில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 3 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பலத்த சேதம் அடைந்தன...
நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் ஆபத்தான பகுதியில் மெக்சிகோ அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்...
ஆனால், 1985, மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளிலும் செப்டம்பர் 19ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமானோர் பலியான நிலையில், அதே தேதியில் இந்த ஆண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.