மோடி, திரௌபதி முர்மு படங்கள் அகற்றம் - சார்பதிவாளருடன் பாஜகவினர் வாக்குவாதம்
ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரின் புகைப்படங்களை திமுகவினர் நேற்று அகற்றினர்.
தகவல் அறிந்து வந்த பாஜக நிர்வாகிகள், சார்பதிவாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், பாஜக மாவட்டத் தலைவர் அஸ்வின் தலைமையில் கட்சித் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், புகைப்படங்களை அகற்றிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.