புனரமைப்பு பணிகள் தாமதம்... லாரிகள் சிறை பிடிக்கப்படும் - எச்சரித்த மக்கள்

Update: 2023-03-13 12:57 GMT

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினம் துறைமுகம் புனரமைப்பு பணிகளை உடனடியாக துரிதப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் சரியாக இல்லாத காரணத்தினால் 22 மீனவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இதனை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பணிகளை தொடங்காவிட்டால் கேரள துறைமுகத்திற்கு கற்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் சிறை பிடிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்