"கடந்த 2 ஆண்டுகளில் விபத்தினால் ஏற்படும் இறப்புகளின் விகிதம் சரிந்துள்ளது" - சென்னை போக்குவரத்து காவல்துறை

Update: 2023-06-22 02:23 GMT

கடந்த 2 ஆண்டுகளில் விபத்தினால் ஏற்படும் இறப்புகள் 19 புள்ளி எழுபது சதவிகிதம் குறைந்துள்ளதாக, சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, உடன் ஒப்பிடும்போது, உயிரிழப்பு வழக்கு விகிதம் 2022 ஆம் ஆண்டு பத்து புள்ளி ஏழு எட்டாக சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உயிரிழப்பு விகிதம் 10 சதவிகிதம் சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2021 உடன் ஒப்பிடும் போது, 2023 - ல் உயிரிழப்பு எண்ணிக்கை 19 புள்ளி எழுபதாக குறைந்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளம் (IRAD) மூலம் GIS (Geographic Information System) வரைபடத்தைப் பயன்படுத்தி சென்னை நகரம் முழுவதும் 104 விபத்து தடங்களை கண்டறிந்து சாலை உள்கட்டமைப்புகளை ஒரு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்