பழங்குடியின பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை -காவல் ஆய்வாளரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கு ஒன்றிற்காக, திருக்கோவிலூர் அருகே உள்ள தி.மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் 4 பேரை, விசாரணை என்ற பெயரில், காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இந்த சம்பவத்தில், திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டத்தோடு, அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
பின்னர், இந்த வழக்கில், 4 பேர் ஜாமின் பெற்ற நிலையில், அரக்கோணம் நகர காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஸ்ரீனிவாசன் மட்டும் ஜாமின் பெறாமல் இருந்துவந்தார்.
பின்னர் ஸ்ரீனிவாசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதனிடையே, அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.