"ஆசை காட்டி மோசம் செய்த பலே பெண்" - லட்சக்கணக்கில் அபேஸ்! - கிராம மக்கள் கண்ணீர்

"ஆசை காட்டி மோசம் செய்த பலே பெண்" - லட்சக்கணக்கில் அபேஸ்! - கிராம மக்கள் கண்ணீர்;

Update: 2022-06-24 00:06 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே உள்ள காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் வளர்மதி. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம், தனது சகோதரி தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், அங்கு ஏலத்தில் விடப்படும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய கிராம மக்கள் மற்றும் வளர்மதியின் உறவினர்கள் சிலர், வளர்மதியிடம் தலா 2 லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாய் வரை செலுத்தியதாக தெரிகிறது. ஆனால் பேசியபடி நகைகளை கொடுக்காமல், வளர்மதி இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. பணம் குறித்து கேட்டால், வளர்மதி குடும்பத்தினர் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும், இதேபோல் ராமநாதபுரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோரிடம் அவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்