- கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
- கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், திடீரென மிதமான மழை பெய்தது.
- இதன் காரணமாக மலைப்பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மேலும், மலைப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீ கட்டுக்குள் வரும் என வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.