அனைத்து ரயில்களின் வேகத்தையும் 5 சதவீதம் உயர்த்தியுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்களில் நாளொன்றுக்கு சுமார் 2 கோடியே 23 லட்சம் பயணிகள் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ரயில் பாதை அட்டவணையை இந்திய ரயில்வே இம்மாத துவக்கத்தில் வெளியிட்டது.
இதில் சென்னை முதல் டெல்லி செல்லும் ரயில்கள் உட்பட நாடு முழுவதும் 500 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்,
மேலும், 130 ரயில் சேவைகள் சூப்பர் பாஸ்ட் வகையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக 5 சதவீதம் வரை ரயில்கள் வேகம் அதிகபடுத்தபட்டுள்ள நிலையில்,
பயண நேரம் குறைவதுடன் ரயில் இயக்கத்தில் 5 சதவீதம் வழிதடங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது
இதனால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடப்பாண்டில் 84 சதவீதம் குறித்த நேரத்திற்குள இயக்க முடியும் எனவும், கடந்த ஆண்டில் இதன் சதவீதம் 75 சதவீதமாஆக இருந்ததையும் இந்திய ரயில்வே குறிப்பிட்டுள்ளது.