"பெட்ரோல் போட்டா காசு தரணுமா?"... பணம் கேட்ட பங்க் ஊழியர்களை சரமாரியாக தாக்கிய மூன்று இளைஞர்கள்

Update: 2023-02-23 05:01 GMT
  • புதுச்சேரியில் வாகனத்தில் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் தர மறுத்த இளைஞர்கள் ஊழியர்களை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. தவளகுப்பம் பகுதியை சேர்ந்த கமல கண்ணன் என்பவர் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வருகிறார்.
  • அங்கு இரவு 10 மணியளவில் மதுபோதையில் வந்த இளைஞர்கள் 3 பேர், தங்கள் வாகனத்தில் அவர்களாகவே பெட்ரோலை நிரப்பியதோடு பணம் தர மறுத்து தகராறில் ஈடுபட்டனர்.
  • பணம் கேட்ட பங்க் ஊழியரை அவர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்