"வேலைக்கு போ" சொன்ன பெற்றோரை தீயிட்டு கொளுத்திய மகன்... புதுச்சேரியில் நடந்த கொடூரம்.!
மேல்திருக்காஞ்சி பகுதியை சேர்ந்த தம்பதி தட்ஷனாமூர்த்தி மற்றும் லதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகனான புகழ்மணி என்பவர் பள்ளி ஒன்றில் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கண்பார்வையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த புகழ்மணியை, கண்ணில் லென்சு மாட்டிக்கொண்டு வேலைக்கு செல்லும்படி பெற்றோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த புகழ்மணி, தாய், தந்தையை தீயிட்டு கொளுத்தி தப்பிசென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், புகழ்மணியின் தாய் லதா சம்பவ இடத்திலயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த அவரது தந்தையை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பியோடிய புகழ்மணியை தேடி வருகின்றனர்.