36 குழந்தைகளை பலாத்காரம் செய்து 3 விரல்களால் கொன்ற சைக்கோ கில்லர்.. குலைநடுங்க வைக்கும் வாக்குமூலம்

Update: 2023-05-30 08:58 GMT

36 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு டெல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது...இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்...

டெல்லி Begumpooril 6 வயது சிறுமி காணாமல் போன வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் ஜூலை 2015-ல் கைது செய்யப்பட்டார் ரவீந்தர் . விசாரணையில் ரவீந்தர் சிறுமையை பலாத்காரம் செய்து கொன்றது உறுதி செய்யப்பட்டது.

ரவீந்தரின் நடத்திய விசாரணையில், போலீசாருக்கு ஏதோ ஒரு பொறி தட்ட, போலீசார் அவனிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில், கடந்த 2008 முதல் 2015 ம் ஆண்டுவரை ரவீந்தர் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்தி தனது பாலியல் இச்சைக்கு பலியாக்கி பின்னர் கொடூராம கொன்றுவீசியது தெரியவந்தது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரவீந்தர் வறுமை காரமாக பிழைப்புத்தேடி தனது குடும்பத்துடன் 2008ல் டெல்லி வந்துள்ளான். அங்கு கூலி வேலைக்கு சென்று வந்த ரவீந்தர் போதைக்கு அடிமையாகியுள்ளான். போதையில், ஆபாச படங்களை பார்த்து ரசிப்பதை வழக்காம கொண்டிருக்கிறான்.

2007 ஆம் ஆண்டு 17 வயதில் போதை மயக்கத்தில் ஒரு சிறுமியை கற்பழித்துள்ளான்.. எங்கே அந்த சிறுமி தன்னை அடையாளம் காட்டி விடுவாளோ என்ற அச்சத்தில் அந்த சிறுமியை கொன்று புதைத்துள்ளான்.

இதன் பின்னர், எப்போதெல்லாம் போதை தலைக்கேறு கிறதோ அப்போதெல்லாம், குழந்தைகளை தேடி செல்ல ஆரம்பித்துள்ளான். சாக்லேட், பணம் கொடுத்து அழைத்து வரப்படும் பிஞ்சுகளை இறக்கமின்றி வேட்டையாடியுள்ளான்.

இதற்காக10 ரூபாய் நோட்டுக்களையும், சாக்லேட்களையும் எப்போதும் பாக்கெட்டில் வைத்திருப்பதை வழக்காமாக கொண்டிருக்கிறான்.

கடத்தி வரும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர், மூன்று விரல்களாலேயே கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றுள்ளான். இவனது குரூர எண்ணத்திற்கு 36 மொட்டுகள் கருகியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த 2015 ல் கைது செய்யப்பட்டு 8 வருடங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட ரவீந்தருக்கு டெல்லி நிதி மன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்