துனிசியா நாட்டில் அதிபருக்கு எதிராக வெடித்த போராட்டம்..போலீசார் மீது பயங்கர தாக்குதல்.. போர்க்களம் போல் காட்சியளித்த வீதிகள்
துனிசியா நாட்டில் அதிபருக்கு எதிராக வெடித்த போராட்டம்..போலீசார் மீது பயங்கர தாக்குதல்.. போர்க்களம் போல் காட்சியளித்த வீதிகள்...
அதிபரைப் பதவி விலகக் கோரி துனிசியா நாட்டில் நடந்த போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் தன் அதிகாரத்தை பலப்படுத்தும் நோக்கில் காய் நகர்த்தி வருவதைக் கண்டித்தும், நாட்டின் நீண்டகால பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற கோரியும் தலைநகர் துனிஸில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறி, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் துனிசிய நகரம் போர்க்களம் போல் காட்சியளித்தது.