சென்னையில் கோடிக்கணக்கில் வசூலான சொத்து வரி..ஊக்கத் தொகை கொடுத்து வசூலை அள்ளிய மாநகராட்சி!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் சொத்து உரிமையாளர்கள் ஆண்டுக்கு இருமுறை சொத்து வரியை செலுத்த வேண்டும். திருத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி விதிகளின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத் தொகையினை பெற்றிடுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்களிடம் இருந்து 372 புள்ளி 74 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை ஏப்ரல் 30-க்குள் செலுத்தியதால், 5 சதவீத ஊக்கத்தொகையாக அவர்களுக்கு 8 புள்ளி 57 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.