"கேசரியா" பாடலை தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் பாடிய இளைஞர்...ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டிய பிரதமர் மோடி
தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் சீக்கிய இளைஞர் ஒருவர் பாடிய கேசரியா பாடலின் வீடியோவை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆலியா பட் மற்றும் ரன்பிர் கபூர் நடித்த பிரம்மஸ்திரா திரைப்படத்தில் இடம்பெற்ற கேசரிய பாடலை சீக்கிய இளைஞரான சினேதீப் சிங் கல்சி தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் பாடியுள்ளார்.. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, இந்திய ஒற்றுமையைக் குறிப்பிட்டு அந்த இளைஞரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்...