இமாச்சல பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். சொற்ப மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி செய்வதாகவும், அங்கு உறுதியற்ற தன்மை மற்றும் ஊழல் நிறைந்துள்ளதாகவும் விமர்சித்தார். ஒரு மாநிலத்தில் ஆட்சியை இழந்தால், மீண்டும் அதை பிடிக்க காங்கிரஸ் கட்சியால் முடியவில்லை என்றார். உதாரணமாக தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஒரு முறை காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றும், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் 50 ஆண்டுகளாகவும், உத்தரபிரதேசம், பீகார், குஜராத், டெல்லி, சிக்கிம், நாகலாந்து மாநிலங்களில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வரமுடியவில்லை என்றும் பிரதமர் மோடி சாடினார்.