தேவாலயங்களில் பாதிரியார்களைக் குறி வைத்துக் கத்திக் குத்து....தீவிரவாத தாக்குதலா?-போலீசார் விசாரணை
ஸ்பெயின் நாட்டில் 2 தேவாலயங்களில் நடந்த கத்திக் குத்து தாக்குதலில் ஒருவர் பலியான நிலையில், தீவிரவாதிகளுக்கு தொடர்புண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்... தெற்கு துறைமுக நகரமான அல்ஜெசிராஸில் 300 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ள சான் இசிட்ரோ மற்றும் நியூஸ்ட்ரா செனோரா டி லா பால்மா ஆகிய 2 வெவ்வேறு தேவாலயங்களில் பாதிரியார்களைக் குறி வைத்து ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்... இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய நபரைக் காவல்துறையினர் கைது செய்த நிலையில், இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்திற்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ வருத்தம் தெரிவித்துள்ளார்.