பயிர்களுக்கான விலை - மத்திய அரசு சொன்ன குட் நியூஸ் | Crops | Central Government

Update: 2023-06-07 16:08 GMT

நெல், உளுந்து, கம்பு, பருத்தி உள்ளிட்ட காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயா்த்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் விவரித்தார் அப்போது பேசிய அவர், காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.அதன் படி நடுத்தர ரக பருத்திக்கான ஆதரவு விலை மூவாயிரத்து 750 ரூபாயில் இருந்து 6 ஆயிரத்து 620 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சோயா பீன்ஸ்-க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை இரண்டாயிரத்து 560 - ல் இருந்து 4 ஆயிரத்து 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மக்கா சோளம் குறைந்தபட்ச ஆதரவு விலை ஆயிரத்து 310 - ல் இருந்து 2 ஆயிரத்து 90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.கேழ்வரகு குறைந்தபட்ச ஆதரவு விலை ஆயிரத்து 550 ரூபாயில் இருந்து ரூ.3,846 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. துவரம் பருப்பு- குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.4,350 - ல் இருந்து 7ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்