விஷமருந்தி உயிரை மாய்த்த கேரளாவின் டிரான்ஸ் பாடிபில்டர் பிரவீன்நாத்

Update: 2023-05-05 08:40 GMT

கேரளாவில் டிரான்ஸ் பாடிபில்டர் பிரவீன்நாத், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கேரளா மாநிலம் பாலக்காடு நென்மாராவைச் சேர்ந்த திரு நம்பி பிரவீன்நாத் 2021ல் மிஸ்டர் கேரளா என்ற பட்டத்தையும் பெற்றார். இந்நிலையில் பிரவீன் நாத் கடந்த பிப்ரவரி 14 தேதி ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய மலப்புரத்தை சேர்ந்த திருநங்கை ரிஷானா ஐஷுவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியானது. இதற்கு பிரவீன் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருச்சூரிலுள்ள வீட்டில் விஷம் அருந்திய நிலையில் மீட்கப்பட்ட பிரவீன்நாத், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்